பதிவு செய்த நாள்
26
செப்
2012
10:09
தென்காசி: கீழப்புலியூர் கோபாலகிருஷ்ணன் கோயிலில் இன்று (26ம் தேதி) தோரண வாயில் கும்பாபிஷேகம் நடக்கிறது. தென்காசி கீழப்புலியூர் மலைமேல் அமைந்திருக்கும் கோபாலகிருஷ்ணன் கோயிலில் தோரண வாயில் புதிதாக கட்டப்பட்டது. தோரண வாயில் கும்பாபிஷேகம் இன்று (26ம் தேதி) நடக்கிறது. காலையில் கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், சுதர்சன ஹோமம், சந்தண கோபாலகிருஷ்ண ஹோமம், பூர்ணாகுதி, தீபாராதனை, மகா அபிஷேகம், மலர் அபிஷேகம் நடக்கிறது. காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் தோரண வாயில் கும்பாபிஷேகம் நடக்கிறது. மதியம் அன்னதானம் வழங்கப்படுகிறது. மாலையில் விளக்கு பூஜை நடக்கிறது. ஏற்பாடுகளை கசமுத்து, மாடத்தியம்மாள், தலைமை செயலக சார்பு செயலாளர் ராமச்சந்திரன், இசக்கி, சக்திவேல், கவுன்சிலர் பிரேமா, சுப்பிரமணியன், ஊர் தர்மகர்த்தா கிருஷ்ணன், நாட்டாண்மைகள் கணபதி, பிச்சையா மற்றும் புலியூர் தெரு விழா குழுவினர் செய்துள்ளனர்.