அன்னூர்: பெரியூர் மாரியம்மன் கோவில் பூச்சாட்டு திருவிழா நடந்தது.
பச்சாபாளையம் ஊராட்சி, பெரியூரில் 12 ஊர் மக்கள் வழிபடும் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் பூச்சாட்டு திருவிழா கடந்த 18ம் தேதி பொரிசாட்டுதலுடன் துவங்கியது. 25ம் தேதி கம்பம் நடுதல், பூவோடு எடுத்தல் நடந்தது. மே 1ம் தேதி வரை தினமும் மாலையில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு மற்றும் பூவோடு எடுத்தல் நடந்தது. நேற்று அணிக் கூடை கொண்டு வருதல், பூங்கரகம் எடுத்தல் ஆகியவை நடந்தது, அம்மன் வெற்றிலை அலங்காரத்தில் அருள் பாலித்தார். சிறப்பு வழிபாடு நடந்தது. 12 ஊர்களைச் சேர்ந்த பல ஆயிரம் பக்தர்கள் பங்கேற்றனர். இன்று காலை அம்மன் அழைத்தல், மாவிளக்கு எடுத்தல், அம்மனுக்கு அலங்கார பூஜை, இரவு கம்பம் பிடுங்குதல் சிம்ம வாகனத்தில் அம்மன் எழுந்தருளி உலா வருதல் நடக்கிறது. நாளை மஞ்சள் நீராட்டுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.