சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டியில் வெங்கக்கல், சிவப்பு கயிறு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04மே 2023 10:05
திருப்பூர்:காங்கேயம் சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோவிலில் வெங்கக்கல் சிவப்பு கயிறு ஆகிய பொருள் ஆண்டவர் உத்தரவு பெட்டியில் வைத்து வழிபாடு செய்யப்படுகிறது.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் - சிவன்மலையில் உள்ள ஸ்ரீசுப்ரமணியசுவாமி கோவிலில் பிரசித்து பெற்றது ஆண்டவன் உத்தரவு பெட்டியாகும். சிவன்மலை ஆண்டவர் பக்தர்களின் கனவில் வந்து குறிப்பால் உணர்த்தி அது தொடர்பான பொருட்களை உத்தரவு பெட்டியில் வைப்பது நடைமுறையில் இருந்து வருகிறது. அவ்வகையில் மார்ச் 28ம் தேதி முதல் அருகம்புல் துளசி நந்தியாவட்டம் பூ வைத்து பூஜிக்கப்பட்டு வந்தது. கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டியை சேர்ந்தவர் சக்திவேல் என்பரின் கனவில் வெங்கக்கல் சிவப்பு கயிறு இரண்டு உத்தரவானது. நேற்று முதல் ஆண்டவர் உத்தரவு பெட்டியில் இவ்விரு பொருளும் வைத்து பூஜை செய்யப்படுகிறது. கோவில் சிவாச்சார்யார்கள் கூறுகையில் ஆண்டவர் உத்தரவு பெட்டியில் எந்த பொருள் வைத்து பூஜை செய்யப்படுகிறதோ அந்த பொருள் சமுதாயத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். தற்போது வெங்கக்கல் சிவப்பு கயிறு வைக்கப்பட்டுள்ளது. இதன் தாக்கம் போகப்போக தான் தெரிய வரும் என்றனர்.