கீழக்கரை: கீழக்கரை அருகே குளபதம் ஊராட்சி வைகை கிராமத்தில் புத்தாளக்கண்மாய் கரையில் உள்ள சிவகாளியம்மன் கோயிலில் கடந்த ஏப்.,27 அன்று காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. மூலவர்கள் சிவகாளியம்மன், சோனைக்கருப்பன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. இன்று காலையில் ஏராளமானோர் பால்குடம், அக்னி சட்டி, பூங்கரகம் உள்ளிட்டவைகள் நேர்த்திக்கடன் பக்தர்களால் செலுத்தப்பட்டது. பூஜைகளை பூஜகர் முருகன் செய்தார். ஏற்பாடுகளை கோயில் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.