Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

ரெணகாளியம்மன் கோயிலில் சித்திரைத் ... சந்தனக்காப்பில் அருள்பாலித்த மகிபாலன்பட்டி பூங்குன்ற நாயகி அம்மன் சந்தனக்காப்பில் அருள்பாலித்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுரை சித்திரை திருவிழா: விடிய விடிய நடந்த தசாவதாரம்.. பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
மதுரை சித்திரை திருவிழா: விடிய விடிய நடந்த தசாவதாரம்.. பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

07 மே
2023
08:05

மதுரை : சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மதுரை ராமராயர் மண்டபத்தில் விடிய விடிய தசாவதார நிகழ்வு நடைபெற்றது. பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.

சித்திரை திருவிழாவின் முத்தான நிகழ்வாக, தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர், பச்சைப்பட்டு உடுத்தி, கடலென திரண்ட பக்தர்களின், கோவிந்தா கோஷம் விண்ணை பிளக்க, வைகை ஆற்றில் 5ம் தேதி காலை எழுந்தருளினார். திருவிழாவின் ஒரு பகுதியாக மண்டூக மகரிஷிக்கு கள்ளழகர் சாப விமோசனம் அளிக்கும் நிகழச்சி நடந்தது. இதனை முன்னிட்டு சேஷ வாகனத்தில் புறப்பட்ட கள்ளழகர், வண்டியூர் வைகை ஆற்றில் உள்ள தேனூர் மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு தேனூர் கிராமத்தவருக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வு நடந்தது. இதையடுத்து கள்ளழகர் கருட வாகனத்தில் எழுந்தருளி, மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார். திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தொடர்ந்து கருட வாகனத்தில் பல்வேறு மண்டகப்படிகளில் எழுந்தருளும் கள்ளழகர், இரவு ராமராயர் மண்டபத்துக்கு வந்தார்.

அங்கு விடிய விடிய தசாவதார அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். முத்தங்கி, மச்ச அவதாரம், கூர்ம அவதாரம், வாமன அவதாரம், ராமர், கிருஷ்ணர், மோகினி உள்ளிட்ட அவதாரங்களில் எழுந்தருளிய கள்ளழகருக்கு விடிய விடிய பல்வேறு பூஜைகள் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தசாவதாரத்தில் கள்ளழகரை கண்டு தரிசித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை: கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோயில் தேர்த்திருவிழாவின் முக்கிய நிகழ்வான கொடியேற்றம், ... மேலும்
 
temple news
புதுச்சத்திரம்: சேந்திரக்கிள்ளை அங்காளம்மன் கோவிலில், மயானக்கொள்ளை திருவிழா நடந்தது.விழா கடந்த 20ம் ... மேலும்
 
temple news
சங்கராபுரம்: சங்கராபுரம் ஆற்றுபாலம் பெரியாயி அம்மன் கோவிலில் நடந்த மாசி மாத திருவிழாவில் 100 கிலோ ... மேலும்
 
temple news
தியாகதுருகம்: சித்தலுார் பெரியநாயகி அம்மன் கோவிலில் மாசித் திருவிழா தேரோட்டம் நேற்று ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்: திருக்கோவிலுாரில் ஹிந்து முன்னணி அமைப்பு சார்பில் நடந்த கந்த சஷ்டி கவசம் பாராயண ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar