பதிவு செய்த நாள்
07
மே
2023
08:05
பழநி: பழநியில் அக்னி நட்சத்திர விழா, நாளை (மே.8) துவங்க உள்ளது.
பழநியில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் கடைசி ஏழு நாட்களும் வைகாசி மாதத்தில் முதல் 7 நாட்களிலும் அக்னி நட்சத்திர விழா நடைபெறும். இந்த ஆண்டு நாளை (மே.8) முதல் மே.21 வரை இவ்விழா நடைபெற உள்ளது. அம்மன் கோயிலில் சீத கும்பம் வெயிலுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற உள்ளது. சித்திரை கழுவு எனும் இவ்விழாவில் உள்ளூர் பக்தர்கள், சேலம், திண்டுக்கல், கரூர், நாமக்கல், கோவை, உள்ளிட்ட வெளியூர் பக்தர்கள் கிரிவலம் வந்து வழிபடுவது வழக்கம். இந்த நாட்களில் மலைக்கோயில் கிரிவலம் வரும்போது மூலிகை காற்று வீசுவதால் நோய்கள் குணமாகும் என்பது ஐதிகம். இதனால் பெண்கள் கடம்ப மலர்களைத் தலையில் சூடியும், ஆண்கள் கைகளில் வைத்தும், அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் மலைக்கோயிலை கிரிவலம் வர உள்ளவர்கள், எண்ணிக்கை அதிக அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.