திருவிழாவிற்காக எடுக்கப்பட்ட மைய தடுப்பு கற்களை மீண்டும் வைக்க கோரிக்கை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08மே 2023 04:05
அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழாவுக்காக ரோட்டில் இருந்து எடுக்கப்பட்ட மையத் தடுப்புக் கற்களை மீண்டும் வைக்க பொதுமக்கள் கோரிக்கை.
அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழாவிற்காக, அவிநாசி கோவை சாலை,சேவூர் ரோடு மற்றும் மங்கலம் ரோடு ஆகிய பகுதிகளிலிருந்து 300ம் மேற்பட்ட மையத்தடுப்பு கற்கள் கிரோன் கொண்டு எடுக்கப்பட்டு ஆங்காங்கே ஓரமாக வைக்கப்பட்டுள்ளது. திருவிழா முடிந்து நான்கு நாட்கள் ஆன நிலையில்,ரோட்டின் நடுவே இரும்பால் ஆன டிவைடர்கள் வைக்கப்பட்டு கயிறுகள் கட்டப்பட்டுள்ளது. இதனால்,டூவீலர்கள், காரில் வருபவர்கள் டிவைடர்கள் நடுவில் கட்டப்பட்டுள்ள கயிற்றை தூக்கிவிட்டு சம்பந்தம் இல்லாத இடங்களில் யுடர்ன் எடுப்பதால் விபத்துகள் நடைபெறுகிறது. மேலும்,போக்குவரத்து விதிமுறைகளை மீறும் சம்பவங்கள் நடைபெறுகிறது என்றும் பொதுமக்கள் கூறுகின்றனர்.
உடனடியாக,மைய தடுப்பு கற்கள் எடுக்கப்பட்ட அனைத்து ரோட்டிலும்,மீண்டும் கற்களை வைத்து போக்குவரத்து விதிமீறல்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். இது குறித்து நெடுஞ்சாலை துறை இளநிலை பொறியாளர் சுப்பிரமணியிடம் கேட்ட போது சனிக்கிழமை அன்று மையத்தடுப்பு கற்கள் வைப்பதற்காக நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது கடந்த மூன்று நாட்களாக கற்களை ரோட்டில் இருந்து அகற்றி வைக்க ஒப்பந்தம் செய்த கிரேன் ஆபரேட்டர் மாற்றுப் பணியில் உள்ளதால்,காலதாமதம் ஆனது. இன்று இரவு பணிகள் தொடங்கி முடித்து விடுவோம் என்றார்.