அன்னூர்: கணேசபுரம், புற்றுக்கண் மாரியம்மன் கோவில் திருக்கல்யாண உற்சவம் நேற்று நடந்தது.
கணேசபுரத்தில் பிரசித்தி பெற்ற புற்றுக்கண் மாரியம்மன் கோவிலில், 28ம் ஆண்டு திருக்கல்யாண உற்சவ திருவிழாவில் கடந்த 3ம் தேதி கம்பம் நடப்பட்டது. 8ம் தேதி வரை தினமும் மாலையில், பக்தர்கள் கம்பம் சுற்றி ஆடுதலும், அம்மனுக்கு சிறப்பு வழிபாடும் நடந்தது. கடந்த 9ம் தேதி அதிகாலையில், பக்தர்கள், சக்தி சிவன் பூங்கரகம் எடுத்து வந்தனர். காலை 8:00 மணிக்கு மாரியம்மனுக்கு, திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதையடுத்து, அம்மன் கோவில் வளாகத்தில், பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். அம்மனுக்கு அலங்கார பூஜை நடந்தது. மாலையில் ஏராளமான பக்தர்கள் அலகு குத்தி வந்து அம்மனை தரிசித்தனர். ஜமாப் இசை நிகழ்ச்சி முக்கிய வீதிகளின் வழியாக நடந்தது. இரவு கம்பத்தை கங்கையில் இடும் நிகழ்ச்சி நடந்தது. இன்று காலை அம்மனுக்கு மறு பூஜை நடந்தது. மஞ்சள் நீராட்டு உற்சவத்தில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.