பெரியாயிபாளையம் காமாட்சி அம்மன் கோவில் பொங்கல் விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10மே 2023 04:05
அவிநாசி: அவிநாசி வட்டம்,பழங்கரை ஊராட்சிக்குட்பட்ட பெரியாயி பாளையத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவில் பொங்கல் திருவிழாவில் 500ம் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்ட மாவிளக்கு ஊர்வலம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
அவிநாசி அடுத்த பழங்கரை ஊராட்சிக்குட்பட்ட பெரியாயிபாளையத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவிலில் பொங்கல் விழா கடந்த 2ம் தேதி பொரிமாத்து நிகழ்ச்சியுடன் தொடர்ந்து 7ம் தேதி வரை விசேஷ பூஜைகள்,பட்டி பொங்கல்,கிராம சாந்தி, காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து 8ம் தேதி இரவு படைக்கலம்,மஞ்சள் நீர்,ஆயுதம் எடுத்து ஊர்வலமாக வரும் நிகழ்ச்சிகளும், 9ம் தேதி அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து தீர்த்த குடம் எடுத்து ஊர்வலமாக நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கோவிலுக்கு சென்றனர்.அதனைத் தொடர்ந்து, இன்று காலை 500ம் மேற்பட்ட பெண்கள் மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர்.அதன் பின்னர் அம்மனுக்கு பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இன்று மஞ்சள் நீர் பூஜை, திருவீதி உலாவுடன் பொங்கல் விழா நிறைவு பெறுகின்றது. முன்னதாக நேற்று கூனம்பட்டி ஆதீனம் குலகுரு குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ நடராஜ ஸ்வாமிகள் பக்தர்களுக்கு அருளாசி உரை வழங்கினார். பொங்கல் விழாவை முன்னிட்டு கோயில் கமிட்டிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.