சித்துராஜபுரம் காளியம்மன் கோயிலில் பொங்கல் திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11மே 2023 09:05
சிவகாசி: சிவகாசி அருகே சித்துராஜபுரம் காளியம்மன் கோயிலில் சித்திரை பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டது. அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது. கோயிலின் முன்பாக பெண்கள், பொங்கல் வைத்து வழிபட்டனர். முளைப்பாரி, பால்குட ஊர்வலம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.