வீரபாண்டி கவுமாரியம்மன் சித்திரை திருவிழா; குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11மே 2023 09:05
தேனி: வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவின் 3ம் நாளான இன்று ஏராளமான பக்தர்கள்அக்னிசட்டி, பால்குடம், காவடி, ஆயிரம் கண் பானை, மண் கலயத்தில் தீர்த்தம் எடுத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் எடுத்தனர்.
2ம் நாளான நேற்று முத்துப்பல்லக்கில் அம்மன்ஊர்வலம் புறப்பாடு நடந்தது. இதில் ஆயிரக்கணக்கானபக்தர்ககள்அம்மன்தரிசனம் செய்தனர். திருவிழா இரவு பகலாக நடப்பதால் பக்தர்கள் தொடர்ந்து வந்தவண்ணம் உள்ளனர். இக்கோயில் திருவிழாவின் மே9 ல் முதல்நாள் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. அன்று மாலை 4:00 மணிக்கு அம்மன் கோயில் வந்தடைந்தது. பின்இரவு 11:00 மணி மண்டகபடிகளுக்கு எழுந்தருளிய அம்மன், அதிகாலை 3:00 மணியளவில் மின் அலங்கார சப்பரத்தில் உலா வந்தது. அதன் மண்டகபடிகளில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
குவிந்த பக்தர்கள்: நேற்று அதிகாலை4:00 மணியில் இருந்து பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது. ஆயிரக்கணக்கானபக்தர்கள்முல்லையாற்றில் குளித்து உடலில் சேறு பூசுதல், பூக்கரகம், மடிப்பிச்சை வேண்டி ஆயிரக்கணக்கானபக்தர்கள் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர். வீரபாண்டி கவுமாரியம்மன் முத்துப்பல்லக்கில் அலங்கரிக்கப்பட்டு நேற்று வீதி உலா நடந்தது. பின் அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள்நடந்தன. அம்மனை தரிசிக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடியதால் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். ஏராளமானோர் பொழுது போக்கு அம்சங்களில் பங்கேற்று விளையாடியும் மகிழ்ந்தனர். இன்று அம்மன் புஷ்பப்பல்லக்கில் அலங்கரிக்கப்பட்டு வீதிஉலா நடக்க உள்ளதால் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால், விரிவாகன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.