கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
திருப்பூர்; திருப்பூர் ஸ்ரீவிசாலாட்சி உடனமர் விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், அப்பர் திருநாள் இசை விழா நடந்தது.சிறப்பு வழிபாடுகளை தொடர்ந்து, அப்பர் தேவாரம், திருப்புகழ் பண்ணிசை பாடப்பட்டது. பாண்டிச்சேரி சம்பந்தம் குருக்கள் பண்ணிசை, கோவை கணேசன் யாழிசை, பொள்ளாச்சி மணிகண்ணன் முழுவிசையுடன், இசைவிழா நடைபெற்றது. அப்பர் தேவார பாடல்களும், திருப்புகழ் பாடல்களும், ராக தாளத்துடன் பாடப்பட்டது. சிவனடியார்கள், பக்தர்கள் பங்கேற்று, கைகளால் தாளமிட்டபடி மெய்மறந்து பக்தியுடன் கேட்டனர்.