பதிவு செய்த நாள்
11
மே
2023
10:05
பழநி: பழநி, சிவகிரி பட்டி, பைபாஸ் சாலையில் உள்ள இடும்பன் கோயிலில் கும்பாபிஷேக நடைபெற பாலாலயம் நடைபெற்றது.
பழநி, ஆயக்குடி விக்னேஸ்வரர் வகையறா திருக்கோயில்களின் நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ள பழநி, இடும்பன் கோயில் சிவகிரிபட்டி பைபாஸ் சாலை அருகே உள்ளது. இக்கோயிலில் விநாயகர், இடும்பன், கடம்பன், முருகன், சிவகிரிநாதன், உமாமகேஸ்வரி மகாலட்சுமி, நவகிரக சன்னதிகள் உள்ளன. கடந்த 1996 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன் பின் தற்போது கும்பாபிஷேக செய்ய ரூ.25 லட்சம் மதிப்பில் கோயில் திருப்பணிகள் துவங்க பட உள்ளது. சிறப்பு யாகம், வாஸ்து பூஜை நடந்தது. இதனைத் தொடர்ந்து அனைத்து சன்னதிகளுக்கும், கோபுரத்திற்கும், பாலாலய பூஜை நடைபெற்று, கண்ணாடியில் பாலாலயம் நடந்தது. இதனைத் தொடர்ந்து சிறப்பு தீபாதாரணை நடந்தது. இதில் கோயில் செயல் அலுவலர் ராமநாதன் மற்றும் கோயில் நிர்வாகிகள், பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.