பதிவு செய்த நாள்
11
மே
2023
03:05
பொங்கலூர்: பொங்கலூர் கவுண்டம்பாளையம் சித்தி விநாயகர், மாகாளியம்மன் கோவில் திருக்கல்யாண பூச்சாட்டு விழா கடந்த,2 ம் தேதி துவங்கியது. தொடர்ந்து பொரி மாற்றுதல், பொட்டு சாமி பொங்கல், கம்பம் வெட்டி கங்கையில் சேர்த்தல், காப்பு கட்டுதல், கும்பம் கங்கையிலிருந்து அழைத்து வருதல், குத்துவிளக்கு பூஜை, விநாயகர் பொங்கல், படைக்கலம் எடுத்தல், அம்மை அழைத்தல் ஆகியன நடந்தது. நேற்று புதன்கிழமை மாவிளக்கு பூஜை, பூவோடு எடுத்தல், மாகாளியம்மன் பொங்கல், உச்சிகால பூஜை, காப்பு அவிழ்த்து கம்பம் மற்றும் கும்பம் கங்கையில் சேர்க்கப்பட்டது. இன்று வியாழக்கிழமை மறுபூஜை மற்றும் மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.