முத்துமாரியம்மன் தேர் திருவிழா; ஊரணி பொங்கல் வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13மே 2023 10:05
சிறுபாக்கம்: சிறுபாக்கம் அருகே தேர் திருவிழாவையொட்டி ஊரணி பொங்கல் வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.
சிறுபாக்கம் அடுத்த மாங்குளம் ஊராட்சியில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்நிலையில், முத்துமாரியம்மன் கோவில் திருவிழா கடந்த மாதம் 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி பாரத நிகழ்ச்சி மற்றும் சுவாமி வீதியுலா நடந்தது. நேற்று முத்துமாரியம்மன், முத்தையா, பூமாலை, வேலடி கருப்பு சுவாமிகளுக்கு ஊரணி பொங்கல் வழிபாடு நிகழ்ச்சி நடந்தது. பெண்கள் கோவில் வளாகத்தில் ஊரணி பொங்கல் வைத்து, சுவாமிகளுக்கு படையல் வைத்து சிறப்பு பூஜைகள் நடந்தது. பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.