பதிவு செய்த நாள்
15
மே
2023
03:05
கிருஷ்ணகிரி ; கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை தாலுகா, மாரசந்திரம் கிராமத்தில், 7 கிராம தேவதைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
தேன்கனிக்கோட்டை தாலுகா, மாரசந்திரம் கிராமத்தில், உலக மக்கள் நன்மைக்காகவும், விவசாயம் செழிக்கவும், மாரியம்மா, எல்லம்மா, கரகம்மா, முனீஸ்வர சுவாமி, சனிபகவான் ஆகிய 7 கிராம தேவதைகளுக்கு சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம் நடந்தது. ஊர்மக்கள் சார்பில், சுவாமிகளுக்கு லட்சார்ச்சனை செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.