நான்கு கோடிக்கு பாடல்கள் வேண்டும் என கட்டளையிட்டார் ஒரு மன்னர். ‘என்ன செய்வதென்று தெரியவில்லை நீங்கள் தான் எங்களுக்கு வழிகாட்ட வேண்டும்’ என அவ்வையாரிடம் தெரிவித்தார்கள் சில புலவர்கள். அவர்களுக்காக கீழ்கண்ட பாடலை அவரும் பாடினார். மதியாதார் முற்றம் மதித்தொருகால் சென்று மிதியாமை கோடி பெறும் உண்ணீர் உண்ணீரென்று உபசரியார் தம்மனையில் உண்ணாமை கோடி பெறும் கோடி கொடுப்பினும் குடிப்பிறந்தார் தம்முடனே கூடுதலே கோடி பெறும் கோடானு கோடி கொடுப்பினும் தன்நாக் கோடாமை கோடி பெறும். * எப்போதும் கண்டு கொள்ளாத ஒருவர் அவருடைய தேவைக்கு அழைக்கிறார் என்றால் அவ்வீட்டிற்கு செல்லாதிருத்தல். * உபசரிக்காதவரின் வீட்டில் உண்ணாமல் இருத்தல். * நல்லகுணம் இல்லாதவர் கோடி பணம் கொடுத்தாலும் அதை வேண்டாம் என மறுக்கும் குணம். * கொடுத்த வாக்குறுதியை உரிய நேரத்தில் காப்பாற்றுதல்.