வேலைகளை சரியாக செய், நேரத்திற்கு சாப்பிடு, உடலுக்கு ஓய்வு கொடு என அறிவுரை சொன்னார் தந்தை. அதை காதில் வாங்கிக் கொள்ளாமல் தன் இஷ்டப்படி நடந்து கொண்டான் வேதா. மறுநாள் அதிகாலை நான்கு மணிக்கு கால் போன போக்கில் நடந்து சென்றான் வேதா. கீழே கிடந்த மூட்டை அவனது காலில் தட்டுப்பட்டது. என்ன என திறந்து பார்த்த போது உள்ளே சாணி உருண்டைகள் இருந்தன. எதிரே இருந்த குளத்தில் ஒவ்வொன்றாக எடுத்து எரியத்தொடங்கினான். ஒரு சாணி உருண்டை தவறி கல்லின் மீது பட்டது. அப்போது பளிச் சென்று அதில் இருந்த வைரம் மின்னியது. மீதியிருந்த சாணி உருண்டைகளை எடுத்து உடைத்த போது வைரங்கள் மின்னியது. வேதாவிற்கு பளிச் என ஞானம் உதயமானது. தவறை உணர்ந்த அவர் தந்தையிடம் சென்று பேசினார் வேதா.