* எப்போதும் சுறுசுறுப்பாக செயல்படு. எல்லாம் உன் வசமாகும். * உன் உழைப்பில் வாழ்வதே உண்மையான கவுரவம். * எல்லோரிடமும் இனிமையாகப் பேசு. * நல்லவர்களோடு பழகு. அவர்களது அறிவுரையே உனக்கு சொத்து. * தர்மம் செய்வதில் எப்போதும் விருப்பம் கொள். * நல்ல செயல்களை முன்னின்று செய். * இளமைக் காலமே படிப்பதற்கு ஏற்ற காலம். * உனக்கு தெரிந்த விஷயத்தை பிறருக்கும் சொல்லிக்கொடு. * எந்தவொரு செயலையும் அக்கறையுடன் செய். * பெருமை தரும் வழியில் சென்று கொண்டே இரு. * அளவுக்கு அதிகமாக சாப்பிடாதே. மீறினால் கஷ்டப்படுவாய். * எவ்வித எதிர்பார்ப்புமின்றி பிறருக்கு உதவி செய். * நன்றாக யோசித்த பிறகு ஒரு செயலில் இறங்கு. * நல்ல நுால்களை தேடிப்படி. அறிவு வளரும். * வறுமையான காலத்திலும் நல்லவர்களின் குணம் மாறாது. * பிறருக்கு உதவாத பணம் தீய வழியில் காணாமல் போகும். * முயற்சி செய்தும் ஒரு விஷயம் நடக்கவில்லையா... அதை மறந்துவிடு. என்கிறார் அவ்வையார்