* நல்ல எண்ணத்துடன் ஒரு செயலை செய். வெற்றி பெறுவது உறுதி. * புகழுக்காக சமூக சேவையில் ஈடுபடாதே. * மனிதனை திருப்திப்படுத்த அன்னதானம் செய்யுங்கள். * சொத்தின் மூலம் கிடைக்கும் சுகம் தற்காலிகமானது. * எல்லோரிடமும் அன்பு காட்டு. குறிப்பாக கெட்டவரிடம் அன்பு காட்டு. * முன்னோர் வகுத்த தர்மம், நியாயத்தை கடைபிடி. அதுவே நிம்மதிக்கான வழி. * தன்னை யாரென்று வெளிப்படுத்தாமல், செயல்புரிவதே தொண்டிற்குரிய லட்சணம். * நல்ல எண்ணத்துடன் செய்யும் செயலுக்கு போட்டி, பொறாமையே இருக்காது. * மனிதப் பிறவி எடுத்ததே, பிறர் மீது அன்பு செலுத்துவதற்கு தான். * வார்த்தைகளை கவனமாக பயன்படுத்து. பிரச்னை என்பதே வராது. * தன் நலத்தோடு, பிறர் நலத்தையும் நாடுபவன் உத்தமன். * பிறரை திருத்த கோபப்படாதே. மீறினால் அது உனக்கே தீங்காக முடியும். * மற்றவர்களது குறைகளை அன்பால் திருத்து. அதற்கு பலன் உண்டு. * பேச்சில் பொதுநலம்; செயலில் சுயநலம் என பலரும் வாழ்கின்றனர். * ஒரு விஷயத்தை எடுத்துச் சொல்வதை விட, அதற்கு நீயே எடுத்துக்காட்டாக இரு.