‘கோயில் இல்லா ஊரில் குடி இருக்க வேண்டாம்’ என்பது பழமொழி. தெய்வச்சிலை, அதன் அருளால் பெருமை கொள்ளும் தலம், இந்த இரண்டினால் சிறப்பு அடையும் தீர்த்தம் என மூன்றும் ஒன்றாக அமைந்தது ராமேஸ்வரம். இதற்கு அருகே உள்ள இடம் பாம்பன். அங்கு பிறந்த அருளாளர்தான் பாம்பன் சுவாமிகள். இவரது முழுப்பெயர் குமரகுருதாச சுவாமிகள். இவர் முருகப்பெருமான் மீது பேரன்பு கொண்டு, ‘குமாரஸ்தவம்’ என்ற மந்திரத்தை அருளியுள்ளார். இந்த மந்திரம் ஒலிக்கும் இல்லத்தில் சகல சுபிட்சங்களும் வந்து சேரும். ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் உள்ளவர்கள், குரு பலம் இல்லாதவர்கள் இதை பாராயணம் செய்யலாம்.