தினமும் கோயிலுக்கு சென்று கடவுளை வழிபடுவது நல்லது. முடியாதவர்கள் வாரத்திற்கு ஒரு முறை அல்லது பவுர்ணமி, அமாவாசை, பிரதோஷம், கார்த்திகை போன்ற விரத நாட்களில் கூடச்செல்லலாம். அதைப்போல் குலதெய்வம் கோயிலுக்கு ஆண்டுக்கு இருமுறையாவது செல்வது அவசியம். சிலர் நாயன்மார்கள் பாடிய தேவாரத் தலங்கள், ஆழ்வார்கள் பாடிய திவ்ய தேசங்களுக்கு செல்வர். அப்போது அவர்கள் ‘புனர்தரிசனம்’ கிடைக்க வேண்டும் என சுவாமியிடம் வேண்டுவர். ‘புனர்’ என்பதற்கு ‘மீண்டும்’ என பொருள். அதாவது ‘மீண்டும் இங்கு வழிபடும் பாக்கியத்தை அருள வேண்டும்’ என்பதுதான் பொருள்.