குழந்தையில்லாத தம்பதியர் அனாதை விடுதிக்கு சென்றார்கள். அங்கிருந்த சிறுவன் ஒருவனை பார்த்து எங்களுடன் வருகிறாயா உனக்கு சாக்லேட், தின்பண்டங்கள், விளையாட்டுச்சாமான்கள் என எல்லாம் தருகிறோம் என கேட்டனர். எதுவும் புரியாத அவன் உங்களுக்கு என்ன வேண்டும் என கேட்டான். நீ எங்களுடன் வர வேண்டும். நாங்கள் உன் மீது அன்பாய் இருப்போம் என்றனர் தம்பதியர். இவர்களை போல அன்புக்காக ஏங்குவோருக்கு உதவிக்கரம் நீட்டுங்கள்.