நீண்ட நாட்களாக தன் மனைவிக்கு காது கேட்க வில்லையோ என்ற சந்தேகம் பீட்டருக்கு இருந்தது. டாக்டரிடம் சென்று யோசனை கேட்டார். அவர் சொன்னபடி தெருவில் நின்று கொண்டு வீட்டுக்குள் இருந்த மனைவியிடம் இன்று என்ன சமையல் எனக் கேட்டார். பதிலில்லை. வீட்டின் எந்த அறையிலும் இருந்து கேட்டாலும் அவரிடமிருந்து பதில் இல்லை. மனைவியின் காதின் அருகே சென்று இன்று என்ன சமையல் என சத்தமாகக் கேட்டார். அதற்கு அவரோ நீங்கள் தெருவில் இருந்து கேட்கும் போதே சமையல் பற்றி சொல்லி விட்டேன் என சொன்னார். இப்படி தான் பலர் பிரச்னைகளை தன்னிடம் வைத்துக் கொண்டு பிறர் மீது குற்றம் சாட்டுவதில் தீவிரம் காட்டுகிறார்கள்.