திருட்டு முயற்சி நடந்த அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் சுத்தப்படுத்தி பரிகார பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23மே 2023 04:05
அவிநாசி ஸ்ரீ கருணாம்பிகை உடன் நம்பர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் நடைபெற்ற கொள்ளை முயற்சி மற்றும் சிலைகள் சேதப்படுத்திய சம்பவத்தை தொடர்ந்து சிறப்பு பரிகாரம் மற்றும் ஹோம பூஜைகள் நடைபெற்றது. அவிநாசியில் உள்ள ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் லிங்கேஸ்வரர் கோவிலில், அத்துமீறி நுழைந்த சரவணன் பாரதி என்ற நபர் 63 நாயன்மார் சிலைகளின் மேல் உள்ள கோபுர கலசங்களையும் ராஜகோபுரத்தில் உள்ள சுதைகளையும் மற்றும் அர்ச்சர்களை தவிர்த்து கர்ப்ப கிரகத்திற்குள் புகுந்து சிலைகளை தொட்டு அலங்காரங்களை கலைத்தும் உள்ளிட்ட ஆகம விதிகளை மீறிய செயலில் ஈடுபட்டார். இதன் காரணமாக சாமிக்கு செய்ய வேண்டிய இரண்டு கால பூஜைகள் தடைபெற்று நின்று போனது. இதற்காக பிரயசித்த அஸ்தர ஹோமங்களான ருத்ர ஜெபம், கணபதி ஹோமம், பஞ்சகவ்யம்,மஹன்யாக ஹோமம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து பக்தர்கள் கால பூஜைக்கு அனுமதிக்கப்பட்டனர்.