பதிவு செய்த நாள்
23
மே
2023
04:05
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே சூலக்கல், மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா, முகூர்த்த காய் உடைத்தல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. விழாவில் தினமும் ஒரு வாகனத்தில் அம்மன் திருவீதி உலா மற்றும் பூவோடு எடுத்தல் நிகழ்ச்சியும் நடைபெற்று வருகிறது. விழாவில் இன்று கிராம மக்கள், அடி அளந்து, மடி பிச்சை எடுத்த அரிசியை, செலுத்தி வழிபட்டனர். நாளை 24ல் காலை, 6:00 மணிக்கு மாவிளக்கு, பொங்கல் வழிபாடும், இரவு, 7:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. 25ம் தேதி காலை, 5:00 மணிக்கு மாரியம்மன், விநாயகர் திருத்தேருக்கு புறப்படுதல், மாலை, 4:30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. வரும், 26ம் தேதி மாலை, 4:30 மணிக்கு திருத்தேர் இரண்டாம் நாள் வடம் பிடித்தல்; வரும், 27ல் மாலை, 4:30 மணிக்கு மூன்றாம் நாள் திருத்தேர் வடம் பிடித்தல் மற்றும் தேர் நிலைக்கு வருதல் நிகழ்ச்சியும், தேர்க்கால் பார்த்தல், கம்பம் கலைத்தல், மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சி நடக்கிறது. 28ம் தேதி திருவிழா நிறைவு பெறுகிறது.