பத்திரகாளியம்மன் கோயிலில் பொங்கல் திருவிழா முளைப்பாரி ஊர்வலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23மே 2023 05:05
சோழவந்தான்: சோழவந்தான் அருகே மண்ணாடிமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட அய்யப்பநாயக்கன்பட்டி நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன் கோயிலில் பொங்கல் திருவிழா ஏப்.30ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையடுத்து மே.5ல் காப்பு கட்டும் நிகழ்வும், மே.21ல் பூசாரி பாலகிருஷ்ணன் தலைமையில் சக்தி கரகம், மாவிளக்கு எடுத்து ஊர்வலமும் நடந்தது. மே.22 காலை பக்தர்கள் பால்குடம் எடுத்தும், மாலை அக்னிச் சட்டி எடுத்தும் வந்தனர். தொடர்ந்து இன்று காலை முளைப்பாரி அழைப்பும், கோயில் வளாகத்தில் திருவிளக்கு பூஜையும் நடந்தது. வார்டு உறுப்பினர் செல்வராணி, கந்தசாமி குடும்பத்தினர் 251 முளைப்பாரிகளுக்கும் சில்வர் பொருட்களை பரிசாக வழங்கினார்கள். மாலை முளைப்பாரியை ஊர்வலமாக எடுத்துச் சென்று வைகையில் கரைத்தனர். மே.28ல் மறுபூஜை நடைபெறும். நாடார் உறவின்முறையினர் விழா ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். கிராம பொதுமக்கள் அனைவரும் தங்களது நேர்த்திகடனை செலுத்தி அம்மனை வழிபட்டனர். காடுபட்டி எஸ்.ஐ., குபேந்திரன் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.