வில்லாபுரம் சௌடேஸ்வரி அம்மன் கோயிலில் கத்தி போடும் திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23மே 2023 05:05
அவனியாபுரம்: மதுரை சௌடேஸ்வரி தேவாங்கர் மகாஜன அறக்கட்டளைக்கு பாத்தியப்பட்ட வில்லாபுரம் மீனாட்சி நகர் சௌடேஸ்வரி அம்மன் கோயிலில் 24ம் ஆண்டு வைகாசி கரக உற்சவ விழா மே 16ல் துவங்கியது. இன்று வைகை ஆற்றிலிருந்து அம்மனை கும்பத்தில் அலங்கரித்து பக்தர்கள் ஊர்வலமாக கோயிலுக்கு எடுத்து வந்தனர். அப்போது ஆண் பக்தர்கள் கத்திகளுடன் தங்களது மார்பு மற்றும் முதுகில் அடித்து சென்றனர். நாளை பொங்கல், வைத்தல், முளைப்பாரி கரைத்தல், மே 25ல் மஞ்சள் நீராடல் விழா நடக்கிறது. கோயில் நிர்வாகிகள் விழா ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.