பன்னிரு ஜோதிர்லிங்கத் தலங்களில் ஒன்றான ஸ்ரீசைலம், ஆந்திராவில் உள்ளது. இங்கு சிவன் மருதமரமாக நிற்கிறார். அந்த மரத்தைச் சுற்றி பற்றி படர்ந்திருக்கும் மல்லிகை கொடியாக அம்பிகை விளங்குகிறாள். அதனால், இவருக்கு ‘மல்லிகார் ஜுனேஸ்வரர்’ என்று பெயர் உண்டானது. இதற்கு ‘மல்லிகை கொடி சுற்றிய மருதீசர்’ என்று பொருள். மூவராலும் தேவாரம் பாடப்பட்ட சிவத்தலமான இங்கு, நந்திதேவர் மலையாக நின்று இறைவனைத் தாங்குவதாக ஐதீகம். இத்தலத்தை ஒருவர் மனதால் நினைத்தாலும், இருக்கும் திசை நோக்கி வணங்கினாலும், தொலைவில் நின்றேவழிபட்டாலும் நேரில் சென்று தரிசித்த புண்ணியம் கிடைக்கும்.