நயினார்கோவில் திருக்கொளுவூர் ஆதி நாகநாதர் கோயிலில் வசந்த உற்சவ விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26மே 2023 06:05
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள நயினார்கோவில் ஒன்றியம் திருக்கொளுவூர் ஆதி நாகநாத சுவாமி கோயிலில் வசந்த உற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கி நடக்கிறது.
நயினார்கோவில் நாகநாதசுவாமி கோயிலில் இருந்து 8 கி.மீ., தொலைவில் திருக்கொளுவூர் ஆதி நாகநாதர் கோயில் உள்ளது. கூவிளபுறமென பெயர் பெற்ற இத்தலத்தில் கூன் பாண்டியனின் கூனலை தீர்த்தும், அவர் கோயில் முன்பு குளம் வெட்டும் பொழுது அதில் தங்க கொளுக்கள் கிடைக்கப்பெற்றதால் திருக்கொளுவூர் என பெயர் பெற்றதாக கூறப்படுகிறது. இங்கு மூலவர் ஆதிநாகநாதர் இன்று வரை புற்று மணலிலேயே பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். மேலும் இங்குள்ள புற்று மணலை பிரசாதமாக பெறுவோருக்கு வேண்டிய வரங்களை அருளுவதாக குமாரசாமி பட்டர் தெரிவித்தார். இச்சிறப்பு வாய்ந்த கோயிலில் வைகாசி வசந்த விழா மே 24 அன்று கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. தினமும் சுவாமி பல்வேறு வாகனங்களில் அருள் பாலிக்கிறார். ஜூன் 1 ம் தேதி மதியம் 3:00 மணிக்கு ரத உற்சவமும், ஜூன் 2 மாலை 5:00 மணிக்கு காப்பு கட்டி விரதம் இருக்கும் பக்தர்கள் பூக்குழி இறங்க உள்ளனர். மறுநாள் காலை பால்குடம், அபிஷேக, ஆராதனைகள் நடந்து, விழா நிறைவடையும். ஏற்பாடுகளை பரம்பரை இனாம் டிரஸ்டி ஸ்தானீகம் குமாரசாமி பட்டர், மணிகண்டன் பட்டர் செய்துள்ளனர்.