மகாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் பந்தக்கால் முகூர்த்தம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27மே 2023 11:05
சிதம்பரம்: குமராட்சி அருள்மிகு ஸ்ரீ மகாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில் பந்தக்கால் முகூர்த்தம் நடந்தது.
குமராட்சி மெயின் ரோட்டில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மகாகாளியம்மன் ஆலயம் அப்பகுதியில் எல்வை சாமியாக நின்று அருள்பாலித்து வருகிறார். அடுத்த மாதம் 7 ம் தேதி கோவில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு புரனமைப்பு பணிகள் நடந்து வருகிறது. கிராம மக்கள் சார்பில் திருப்பணிகள் நடந்து வருகிறது. கும்பாபிரஷகத்தையொட்டி பந்தகால் முகூர்த்தம் நடைபெற்றது. சிதம்பரம் எம்.எவ்.ஏ.பாண்டியன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். நிகழ்வில் குமராட்சி ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்வாணன், ஊர் நாட்டாமை கலியபெருமாள் ஆசிரியர் வரதராஜன், ராமச்சந்திரன், சுந்தரமூர்த்தி, வார்டு. உறுப்பினர் ராஜமவைசிம்மன் ராஜலட்சுமி குருசாமி. ராமகிருஷ்ணன், கோவிந்தராஜ், ரமேஷ் ஸ்தபதி கண்ணன், மணிவண்ணன், மணிகண்டன், உதயசூரியன் மற்றும் இராம மக்கள் திரளாக பங்கேற்றனர்.