தேவகோட்டை: தேவகோட்டை அருகே உள்ள கள்ளிக்குடி கிராமத்தில் காருடைய அய்யனார் கோவில் புரவி எடுப்பு விழா மே. 20 கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து சுவாமி தினமும் சிறப்பு பூஜைகள் நடந்தன. பெண்கள் விளக்குகள் ஏற்றி விளக்கு பூஜை நடத்தினர். ஒன்பதாம் நாள் ஈகரையிலிருந்து பக்தர்கள் நேர்த்திக்கடனாக குதிரைகள், பொம்மைகள் தூக்கி நேர்த்திக்கடன் செலுத்தி வழிப்பட்டனர். சுவாமி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மறுநாள் காலை குதிரைகளுக்கு கண்திறந்து வழிபட்டனர். வாலிபாடி கொடியிறக்கம் நடந்தது. இதனைத் தொடர்ந்து பகலில் வடமாடு மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடந்தன. திருவிழாவில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த மக்கள் பங்கேற்று சுவாமியை வழிப்பட்டனர்.