ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே செங்குடி மிக்கேல் அதிதூதர் ஆலய விழா, செப்.,20ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் நவநாள் திருப்பலி நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான இன்று( செப்.28) தேர்பவனி நடக்கிறது. நாளை காலை 8 மணிக்க சிறப்பு திருப்பலி நடந்தது. பங்குத்தந்தை சாமு இதயன் திருப்பலி நிறைவேற்றுகிறார். ஏற்பாடுகளை கிராம கமிட்டி மற்றும் இளைஞர் மன்றத்தினர் செய்து வருகின்றனர்.