பதிவு செய்த நாள்
28
செப்
2012
10:09
கோபிசெட்டிபாளையம்: கோபி ஐயப்ப ஸ்வாமி கோவிலில் அக்., 7ம் தேதி வரை, தசாவதார திருவிழா மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி ஆதிகேசவ பெருமாள் திருக்கல்யாண உற்சவ விழா நடக்கிறது. கோபி ஐயப்ப ஸ்வாமி கோவிலில் நேற்று கணபதி ஹோமம், கொடியேற்றம், ஆதி கேசவ பெருமாள் மச்ச அவதாரத்தில் கோவில் வலம் வருதல் நடந்தது.இன்று மாலை 6 மணிக்கு கூர்ம அவதாரத்தில் கோவில் வலம் வருதல், இரவு 7 மணிக்கு அலங்கார தீபாராதனை, அன்னதானம் வழங்குதல், நாளை வராக அவதாரத்தில் கோவில் வலம் வருதல், 30ம் தேதி மாலை 6 மணிக்கு நரசிம்ம அவதாரத்தில் கோவில் வலம் வருதல், அக்., 1ம் தேதி வாமன அவதாரம், 2ம் தேதி பரசுராமர் அவதாரம், 3ம் தேதி ராம அவதாரம், 4ம் தேதி பலராமர் அவதாரம், 5ம் தேதி கிருஷ்ணர் அவதாரம், 6ம் தேதி கல்கி அவதாரத்தில் வலம் வருதல் நடக்கிறது.அக்., 7ம் தேதி காலை 9 மணிக்கு ஸ்ரீ தேவி, பூதேவி சமேத ஆதிகேசவ பெருமாளுக்கு அபிஷேக பூஜை, 10 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், பகல் 1 மணிக்கு அன்னதானம் , மாலை 6 மணிக்கு திருக்கோவில் வலம் வருதல் நடக்கிறது.