பதிவு செய்த நாள்
31
மே
2023
04:05
ஆர்.எஸ்.மங்கலம்; ஆர்.எஸ்.மங்கலம் அருகே அழகர்தேவன் கோட்டை, முத்துமாரியம்மன் கோயில் முளைப்பாரி விழா நடைபெற்றது. முன்னதாக, முத்துமாரியம்மன் மற்றும் அழகுடைய அய்யனார், கருப்பணசுவாமி, சோணை, முன்னோடி, காளியம்மன், மந்தை பிடாரி மகா மாரியம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கும், சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று, தீப ஆராதனை காண்பிக்கப்பட்டன. தொடர்ந்து, வீடுகளில் வளர்க்கப்பட்ட முளைப்பாரிகளை பெண்கள் கோயிலில் வைத்து வழிபாடு செய்தனர். தொடர்ந்து, இன்று முக்கிய வீதிகள் வழியாக முளைப்பாரிகளை எடுத்துச் சென்று குளத்தில் கரைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். விழாவை முன்னிட்டு, இரவில் பெண்களின் கும்மியாட்டமும், இளைஞர்களின் ஒயிலாட்டமும் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கிராமத்தினர் செய்திருந்தனர்.