பதிவு செய்த நாள்
03
ஜூன்
2023
05:06
எரியோடு: எரியோடு மணியகாரன்பட்டியில் பாப்பம்மன் கோயில் மாலை கும்பிடு விழா நடந்தது. இன்று காலை கோயில் வீட்டில் இருந்து பூசாரி, பெத்தக்காப்பு, பொறைகெடியகாரர், பொதிகாவல்காரர் ஆகியோரும், பாரம்பரிய வழக்கப்படி உடை அணிந்த படி அவர்களது மனைவிகளும், கோயில் பங்காளிகளும் மூங்கில் கூடையில் பூக்கள், மாவு, போனம், அபிஷேகம், பொங்கல் பொருப பொருட்களை சுமந்தபடி ஊர்வலமாக கோயில் வந்தனர். வளாகத்தில் பொங்கல் வைத்து, சவடம்மன், பாப்பம்மன், தாத்தப்பன், சிக்கம்மன், மாரஜ்ஜியம்மன் தெய்வங்களுக்கு வழிபாடு நடத்தினர். அன்னதானம் நடந்தது. தலைவர் சவடமுத்து, செயலாளர் ராஜூ உள்ளிட்ட கோயில் நிர்வாகிகள் விழா ஏற்பாட்டினை செய்திருந்தனர்.