மனிதர்களிடம் ஏதேனும் ஒரு குறை இருக்கும். இதைத்தான் பேச்சு வழக்கில் விரலுக்கேற்ற வீக்கம் என சொல்வர். மலர்ந்த ரோஜாவை ஏக்கத்துடன் பார்த்தது காகிதப்பூ. ஏன் இப்படி பார்க்கிறாய் என கேட்ட அதனிடம் ‘‘நீ எவ்வளவு அழகு. எப்போதும் நறுமணத்தோடு இருக்கிறாயே நானும் தான் இருக்கிறேனே என சலித்துக் கொண்டே சொன்னது காகிதப்பூ. அதற்கு அதுவோ ‘‘காலையில் மலரும் நான் மாலையில் வாடி விடுவேன். நீயோ வாடுவதில்லை’’ என சொன்னது. ஒன்று இருந்தால் ஒன்றில்லை. எல்லோருக்கும் நிறையும் குறையும் இருக்கத்தான் செய்யும் என ஆறுதல் அடைந்தது காகிதப்பூ.