இளைஞர் ஒருவரை பின் தொடர்ந்து பன்றிக்குட்டிகள் சென்றன. இதை பார்த்த போதகர் ஒருவர், ‘‘சகோதரா! இதை எப்படி அருமையாக உம்மால் மட்டும் செய்ய முடிகிறது’’என கேட்டார். அதற்கு அவரோ ‘‘என்னிடம் ஒரு கூடை நிறைய சீனிகிழங்குகள் உள்ளன. அதை கீழே போட்டவுடன் அதை தின்ற பன்றிக்குட்டிகள் அதன் ருசிக்காக என்னை பின் தொடர்கின்றன’’என்றார். இவைகளை எங்கு அழைத்து போகிறீர் என கேட்க அவரோ கசாப்பு கடைக்கு கொண்டு போகிறேன் என்றார் அவர். கவர்ச்சி தான் மக்களை ஈர்க்கிறது என்பதை அறியாமல் பலர் வாழ்கின்றனர்.