பழநி கோவிலில் திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டும் நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஜூன் 2023 17:45
பழநி ; பழநி முருகன் கோயிலின் உபகோயிலான பெரியநாயகி அம்மன் கோவிலில், திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டும் நிகழ்வு நடைபெற்றது.
பழநி முருகன் கோயிலின் உபகோயிலாக உள்ள கிழக்கு ரத வீதி, பெரியநாயகி அம்மன் கோவிலில் திருஞான சம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டும் நிகழ்வு இன்று நடைபெற்றது. இதில் திருஞான சம்பந்தருக்கு 16 வகையான அபிஷேகம் நடைபெற்றது. பொன் கிரீடம் சூடி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தீபாராதனை நடைபெற்றது. ஓதுவார்கள் தேவாரப் பாடல்களைப் பாடி வழிபட்டனர். சிவனும் பார்வதியும் ரிஷப வாகனத்தில் கோயில் வலம் வந்தனர். அதன்பின் பொற் கிண்ணத்தில் திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சித்தநாதன் அன் சன்ஸ் பழனிவேல், செந்தில்குமார், விஜயகுமார், கோயில் கண்காணிப்பாளர் அழகர்சாமி. உட்பட பலர் கலந்து கொண்டனர்.