Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நடிகர் ரஜினியின் மகள் சவுந்தர்யா ... ஸ்ரீரங்கம் கோயிலின் புதிய இணை கமிஷனர் பொறுப்பேற்பு ஸ்ரீரங்கம் கோயிலின் புதிய இணை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மானாமதுரை அருகே ஆயிரம் ஆண்டு பழமையான பாண்டியர் கால விநாயகர் சிற்பம் கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
மானாமதுரை அருகே ஆயிரம் ஆண்டு பழமையான பாண்டியர் கால விநாயகர் சிற்பம் கண்டுபிடிப்பு

பதிவு செய்த நாள்

05 ஜூன்
2023
06:06

மானாமதுரை: மானாமதுரை அருகே எம் கரிசல்குளத்தில் பாண்டியர் கால விநாயகர் சிற்பம் மற்றும் நாயக்கர் சிலைகளை வரலாற்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.


சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாலுகா எம்.கரிசல்குளம் கிராமத்தில் உள்ள விநாயகர் ஆலயத்தில் தென்னக வரலாற்று மையத்தைச் சேர்ந்த வரலாற்று ஆர்வலர் மீனாட்சி சுந்தரம், வரலாற்றுத்துறை பேராசிரியர்கள் தங்கமுத்து,பாலசுப்பிரமணியன் ஆகியோர் அங்கு சென்று கள ஆய்வு செய்த போது அந்த சிற்பம் 1000 ஆண்டுகள் பழமையான பாண்டியர் காலத்தைச் சேர்ந்த விநாயகர் சிற்பம் என்று கூறினர். இது குறித்து அவர்கள் மேலும் கூறுகையில்,இந்த சிற்பம் 3 அடி உயரமும் ஒன்றரை அடி அகலமும் கொண்ட பலகைக்கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. விநாயகர் லளிதாசனக் கோலத்தில் பீடத்தின் மீது அமர்ந்துத்துள்ளார். தலையில் கரண்ட மகுடம் தரித்தும் அகன்ற 2 காதுகளுடன் அழகாக சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. இந்த சிற்பமானது 4 கரங்களுடன் வடிக்கப்பட்டுள்ளது.பின் வலது கரத்தில் மழுவும், பின் இடது கரத்தில் பாசக்கயிரும், முன் வலது கரத்தில் முறிந்த தந்தமும், முன் இடது கரத்தில் மோதகமும் செதுக்கப்பட்டுள்ளது. மேலும் தும்பிக்கை மோதகத்தை எடுப்பதுபோல் செதுக்கப்பட்டுள்ளது. பாண்டியர்களுக்கே உரித்தான கலை நயத்தில் இந்த சிற்பம் சிறப்பாக வடிக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த விநாயகர் கோவில் முன் மண்டபம் நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டுள்ளது. முன் மண்டபத்தூணில் இரண்டு ஆண் சிலை ஆடை ஆபரணங்களுடன் எதிரெதிரே இரு கை கூப்பி வணங்கியபடி உள்ளது அதில் ஒருவர் திருமலை நாயக்க மன்னராக இருக்கலாம். மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களுள் மிகவும் புகழ் பெற்றவர் திருமலை நாயக்கர் இவர் கி.பி 1623 தொடக்கம் 1659 வரையான காலப்பகுதியில் ஆட்சிப்பொறுப்பில் இருந்தார். இவர் ஆட்சி செய்த காலத்தில் தான் எந்த ஒரு கோவில் பணி செய்தாலும் அங்கு தனது உருவச்சிலையை இரு கை கூப்பி அந்த தெய்வத்தை வணங்கியபடி வைப்பது வழக்கம். இங்கும் அதுபோல் வணங்கியபடியே உள்ளது.இந்த கோவிலின் முன் மண்டபம் அவரால் கட்டப்பட்டு இருக்கலாம் மற்றொருவர் அவரது பிரதானியாக இருக்கலாம் என்றும் கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் செம்பை சங்கீத உற்சவம் நேற்று துவங்கியது.கேரள மாநிலத்தின் ... மேலும்
 
temple news
பழநி; பழநி கோயிலில் ரஷ்யாவைச் சேர்ந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து பித்தளை வேல் காணிக்கையாக ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் வரதராஜப் பெருமாள் கோயிலில் உலக நன்மைக்காக பவித்திர பூஜையில் ஏராளமானோர் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர்; சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் கார்த்திகை மாத பிரதோஷம், அமாவாசை ... மேலும்
 
temple news
அழகர்கோவில்; கள்ளழகர் கோயிலில் நேற்று உண்டியல் திறப்பு நடந்தது. இணை கமிஷனர் செல்லதுரை, உதவி கமிஷனர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar