பதிவு செய்த நாள்
09
ஜூன்
2023
11:06
வில்லிவாக்கம், சவுமிய தாமோதர பெருமாள் கோவிலில், வைகாசி பெருவிழாவை முன்னிட்டு, நேற்று கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் துவங்கியது.
சென்னை, வில்லிவாக்கத்தில் உள்ள சவுமிய தாமோதர பெருமாள் கோவில், 800 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள, பிரசித்தி பெற்ற இக்கோவிலில், ஆண்டுதோறும் வைகாசி பெருவிழாவை ஒட்டி, பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, வைகாசி பெருவிழாவை முன்னிட்டு, முதல் நாளான நேற்று காலை, கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் துவங்கியது. தொடர்ந்து, காலை 7:00 மணிக்கு, துவஜா ரோஹணம் கேடயம் உற்சவத்தில், சுவாமி மாடவீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று இரவு 8:00 மணிக்கு, சிம்ம வாகன உற்சவம் நடந்தது. இன்று காலை 7:00 மணிக்கு கேடயம் உற்சவமும், இரவு 8:00 மணிக்கு ஹம்ஸ வாகன உற்சவமும் நடைபெறுகிறது. நாளை சனிக்கிழமை காலை, கருடசேவை உற்சவம் நடக்கிறது. தொடர்ந்து, 17ம் தேதி வரை காலையும், மாலையும் பிரம்மோற்சவம் நடக்கிறது.