அன்னூர்; பனந்தோப்பு மயில், சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். நாகமாபுதூர் அருகே பனந்மதோப்பு மயிலில் உள்ள ஸ்ரீ சக்தி விநாயகர் திருக்கோவிலில் கடந்த 6ம் தேதி விநாயகர் வழிபாடுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. மாலையில் முதற்கால வேள்வி பூஜையும், இரவு கோபுர கலசம் வைத்தலும், எண் வகை மருந்து சாத்துதலும் நடந்தது. நேற்று முன்தினம் அதிகாலையில் இரண்டாம் கால வேள்வி பூஜையும், காலை 6:45 மணிக்கு சக்தி விநாயகருக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. மகா தீபாராதனை, தச தரிசனம் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் எம்.எல்.ஏ., அமுல் கந்தசாமி, கவுன்சிலர் கார்த்திகேயன் உட்பட திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.