பதிவு செய்த நாள்
10
ஜூன்
2023
04:06
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம், வணிகர் வீதியில் உள்ள பத்ரகாளியம்மன் கோவிலில், பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டு, கடந்த ஆண்டு ஜூன் 9ல், கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது. முதலாம் ஆண்டு கும்பாபிஷேக தின நிறைவையொட்டி, நேற்று வருஷாபிஷேக பூர்த்தி விழா நடந்தது. விழாவையொட்டி, நேற்று காலை 8:00 மணிக்கு, 108 சங்காபிஷேகமும், காலை 11:00 மணிக்கு மஹா அபிஷேகமும் நடந்தது. மாலை 5:00 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. தொடர்ந்து, காஞ்சி ஜெயஸ்ரீ நாட்டியாலயா பயிற்சி கூடம் மாணவியரின் பரத நாட்டிய கலைநிகழ்ச்சி நடந்தது. இரவு 7:00 மணிக்கு, மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய பத்ரகாளி அம்மன், உட்பிரகாரத்தில் உலா வந்தார். விழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.