தருமபுரம் ஆதீன பட்டினப்பிரவேசம்; பல்லக்கு சேவை.. குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஜூன் 2023 11:06
மயிலாடுதுறை: தருமபுரத்தில் 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தர்மபுரம் ஆதீன திருமடம் அமைந்துள்ளது. அருகே 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ ஞானாம்பிகை உடனுறை ஸ்ரீ ஞானபுரீஸ்வரர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. கோவிலில் பத்து நாள் வைகாசி பெருவிழாவை முன்னிட்டு கடந்த 31ம் தேதி கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து நாற்காலி பல்லுக்கு உற்சவமும் அதனை தொடர்ந்து இன்று இரவு தருமபுரம் ஆதீன 27வது குரு மஹா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக்கு ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் சிவிகை பல்லக்கில் எழுந்தருள பக்தர்கள் பல்லக்கை சுமந்து நான்கு வீதிகளையும் வலம் வந்தனர். அதனை அடுத்து தருமபுர ஆதீன குரு மகா சன்னிதானத்தின் குழு காட்சி நடைபெறும் நிகழ்சியில் பல்வேறு ஆதீன குரு மகா சன்னிதானங்களும் தர்மபுரம் ஆதீன கட்டளை தம்பிரான்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கண்டுகளித்து தரிசனம் செய்து குரு அருளை பெற்றனர்.