கும்பகோணம்: நாச்சியார்கோவில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட மாணவிகள், திருச்சேறை சாரபரமேஸ்வரர் கோவிலில் உழவாரப்பணிகள் செய்தனர். கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாமின், இரண்டாவது நாள் திருச்சேறை கடன் நிவர்த்தி தலமான சாரபரமேஸ்வரர் கோவிலில் நடந்தது. மாணவிகள் மேற்கொண்ட உழவாரப்பணிகளை, சாரபரமேஸ்வரர் கோவில் ஆலய அர்ச்சகர் சுந்தரமூர்த்தி குருக்கள் துவக்கி வைத்தார். நாட்டு நலப்பணித்திட்ட மாணவிகள் கோவிலின் நந்தவனம், பிரகாரம் என அனைத்து பகுதிகளிலும் தூய்மை பணிகளை மேற்கொண்டனர். நாட்டு நலப் பணித்திட்ட சிறப்பு முகாமின், இரண்டாம் நாள் பணிகளை பார்வையிட்ட பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேந்திரன், கோவில் தக்கார் நிர்மலாதேவி, நிர்வாக அதிகாரி ராதாகிருஷ்ணன் மற்றும் சுப்ரமணியகுருக்கள் ஆகியோர், மாணவிகளை பாராட்டினர். முகாமினை மலர்விழி, மணிகண்டன் ஆகியோர் மேற்பார்வையிட்டனர்.