உஞ்சவ்ருத்தி என்றால் ‘பிச்சை ஏற்பது’, அல்லது வீடு, வீடாகச் சென்று அரிசி போன்றதானியங்களை பெற்றுக் கொள்வது. தர்ம சாஸ்திரம் கூறும் உஞ்சவிருத்தி இதிலிருந்து வேறானது.அந்தக் காலத்தில் வயலில் நெல்லை அறுத்து, களத்து மேட்டில் குவிப்பார்கள். நெற்கதிரை அடித்து நெல்லை மலைபோல ஒன்று திரட்டி மூடையாக கட்டுவார்கள். ‘எடுப்பதெல்லாம் கொடுப்பதற்கே’ என்னும்சிந்தனையோடு களத்தில் சிறிது அளவு நெல்லை விட்டுச் செல்வர். இதை தர்மம் செய்வதாகக்கருதினர். சோற்றுக்கு வழியில்லாத ஏழைகள் களத்தில் சிதறி கிடக்கும் நெல்லை எடுத்துச் செல்வர். ‘உஞ்சவிருத்தி’என்பதற்கு ‘சிதறிக் கிடப்பதை ஒன்று திரட்டுவது’ என்றும் பொருள் உண்டு.