ஆதிசங்கரர், பத்ரிநாத் சென்ற போது, தன் குருவான கோவிந்த பகவத்பாதரையும், குருவின் குருவானகவுடபாதரையும் சந்தித்தார். அவர்களை தட்சிணாமூர்த்தியின் அம்சமாகவே கருதி,‘தட்சிணாமூர்த்தி அஷ்டகம்’ பாடினார். ஒவ்வொரு ஸ்லோகம் முடியும் போதும், குருவின் பாதத்தில் விழுந்து சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தார்.‘சத்ச்லோகி’ என்று தொடங்கும் ஸ்லோகத்தில், “ஸ்பர்சவேதி’ என்னும் பொருளைபித்தளையோடு சேர்த்தால்தங்கமாகி விடும். அதுபோல், குருவை சரணடைந்த சீடனும் பூரணநிலை அடைகிறான். ஆனால், ஸ்பர்சவேதிக்கும்குருவுக்கும் வேறுபாடு உண்டு. ஸ்பர்சவேதி, தன்னோடு சேர்ந்த பித்தளையை மட்டுமே தங்கமாக்கும். ஆனால்,குருவோடு சேர்ந்த சீடன், தானும் பூரணமாகி,மற்றவர்களையும் பூரணநிலை பெறச் செய்கிறான்.