நாகப்பட்டினம்: நாகை அடுத்த வடக்கு பொய்கைநல்லூர் கோரக்க சித்தர் ஆசிரமத்தில், தியான மண்டபம் திறப்பு விழா நடந்தது.நாகை அடுத்த வடக்கு பொய்கைநல்லூரில் அமைந்துள்ள கோரக்க சித்தர் ஆசிரமத்தில், புதிதாக கட்டப்பட்ட தியான மண்டபம் திறப்பு விழா நேற்று நடந்தது. தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், தியான மண்டபத்தையும், குன்றக்குடி ஆதீனம் பொன்னம்பல அடிகளார், நந்தவனத்தையும் திறந்து வைத்தனர். திருப்பனந்தாள் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ காசிவாசி முத்துக்குமாரசாமி தம்பிரான் சுவாமிகள், தல வரலாற்று நூலை வெளியிட்டார். திரைப்பட இசை அமைப்பாளர் இளையராஜா, கோரக்க சித்தர் திருவுருவத்தை திறந்து வைத்தார்.தமிழக கருவூலத்துறை கமிஷனர் வீரசண்முகமணி, கலெக்டர் முனுசாமி, முன்னாள் அமைச்சர் ஜீவானந்தம் உட்பட பலர், விழாவில் கலந்து கொண்டனர்.