அக்கரைப்பட்டி காளியம்மன் கோவில் திருவிழாவில் பாரிவேட்டை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஜூன் 2023 05:06
சாணார்பட்டி, சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி ஊராட்சி அக்கரைப்பட்டி ஞான விநாயகர், கன்னிமார், கருப்பசாமி, காளியம்மன் கோவில் திருவிழாவில் நடந்த பாரிவேட்டை நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழாவையொட்டி ஜூன் 9 மாலை தோரணம் கட்டுதல், இரவு அம்மனுக்கு சாமி சாட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. தொடர்ந்து தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தது. ஜூன் 11 கிராம தெய்வங்களுக்கு பலம் வைத்தல், இரவு மேளதாளம் மற்றும் வான வேடிக்கையுடன் அம்மன் கரகம் ஜோடித்து பூஞ்சோலை செல்லுதல் நிகழ்ச்சி நடந்தது. இன்று அக்கினி சட்டி, மாவிளக்கு, முளைப்பாரி எடுத்தல் மற்றும் பொங்கல் வைத்து கிடாய் வெட்டுதல் உள்ளிட்ட நேர்த்தி கடன்களை பக்தர்கள் அம்மனுக்கு செலுத்தினர். விழாவின் முக்கிய நிகழ்வாக மாலை பாரி வேட்டை எனும் பாரம்பரிய புலி வேட்டை நிகழ்ச்சி நடந்தது. இதில் இளைஞர்கள் புலி வேஷம் அணிந்தும், வேட்டைக்காரர்கள் போல் வேஷம் அணிந்தும் புலியை வேட்டை ஆடுவது போல் பாவனை செய்து பாரிவேட்டை நிகழ்ச்சி நடந்தது. நாளை மாலை அம்மன் மஞ்சள் நீராட்டத்துடன் பூஞ்சோலை செல்லுதலுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை அக்கரைப்பட்டி கிராம மக்கள் செய்திருந்தனர்.