மானாமதுரையின் புனித குளமான அலங்காரகுளத்தை சீரமைத்து மரக்கன்றுகள் நடுதல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஜூன் 2023 04:06
மானாமதுரை: மானாமதுரை தாயமங்கலம் ரோட்டில் உள்ள புனிதம் வாய்ந்த அலங்கார குளத்தின் கரைகள் சீரமைக்கப்பட்டு குளத்தை சுற்றிலும் மரக்கன்றுகள் நடப்பட்டது.
மானாமதுரை தாயமங்கலம் ரோட்டில் உள்ள புனிதம் வாய்ந்த அலங்கார குளத்தில் மானாமதுரை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கோயில்களில் நடைபெறும் முளைப்பாரி திருவிழாக்களின் போது கொண்டு செல்லப்படும் முளைப்பாரிகளை இந்த குளத்தில் கரைப்பது மேலும் விநாயகர் சதுர்த்தியின் போது வீடுகள் மற்றும் தெருக்களில் வைத்து வழிபடும் விநாயகர் சிலைகளையும் கரைப்பது வழக்கம்.மேலும் ஆடி மாதம் நடைபெறும் வீர அழகர் கோவில் திருவிழாவில் சக்கரத்தாழ்வாருக்கு தீர்த்தவாரி நடைபெறும். இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த இந்த அலங்கார குளத்தை சீரமைத்து சுற்றிலும் மரக்கன்றுகள் நட வேண்டும் என்று மாங்குளம் ஊராட்சி தலைவர் முருகவள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் எம்.எல்.ஏ., தமிழரசியிடம் கோரிக்கை விடுத்ததையடுத்து முன்னாள் முதல்வர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தற்போது அலங்கார குளத்தின் கரைகள் சீரமைக்கப்பட்டு தற்போது குளத்தை சுற்றிலும் நூற்றுக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடும் விழாவில் எம்.எல்.ஏ., தமிழரசி கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலர் பிரபா, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பாரதிதாசன்,உதவி செயற்பொறியாளர் மோகன்குமார், உதவி பொறியாளர் செந்தில்குமார், முன்னாள் எம்.எல்.ஏ.,மதியரசன், ஒன்றிய செயலாளர்கள் துரைராஜாமணி, வெங்கட்ராமன்,மானாமதுரை ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் முத்துச்சாமி, நிர்வாகிகள் தேசிங்கு ராஜன், சடையப்பன் கலந்து கொண்டனர்.